12 ராசிக்காரர்கள் செய்யவேண்டிய தானங்களும் பலன்களும்...!!

Donations
Sasikala|
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யவேண்டும். ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்யவேண்டும். இவர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.
 
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்யவேண்டும். புதன் கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண்பொங்கலை தானம் கொடுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.
 
கடகம்: கடக ராசிக்காரர்கள் பசு மாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ளவேண்டும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து  வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
 
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்யவேண்டும். இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
 
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்கள் தானம் செய்யவேண்டும்.
 
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்யுங்கள்  இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு வந்து சேரும்.
 
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்யவேண்டும். கடன்கள் தீர லட்சுமி  நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.
 
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபடவேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு  பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான  பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.
 
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்கவேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். 
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
 
மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம்  அதிகரிக்கும்.மேலும் நல்லெண்ணெய் தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.


இதில் மேலும் படிக்கவும் :