செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. பாலியல்
Written By Murugan
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (19:41 IST)

படுக்கையறையில் பெண்களை வெல்வது எப்படி?

மனித உறவில் உடல் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு படுக்கையைறயில் பெண் தனக்கு அடிமை என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. இதனால், பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அவள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடல் உறவு கொள்வதே பல ஆண்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.



தன்னுடைய இச்சை முடிந்ததும் வேலை முடிந்தது என்று தூங்கிப் போகும் ஆண்கள் இங்கு அதிகம். இதனால்தான் பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆண்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. உறவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

என்னதான் நம்முடைய மனைவி என்றாலும், உறவிற்கு தயாராகும் முன்  அவளிடம் அனுமதி பெறவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே உங்கள் மனைவி உறவுக்கு தயாராக இருக்கிறாரா என்று முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அதை நீங்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கை அறையில் மெல்லிசை இசைக்கு எப்போதும் தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மெல்லிசையை கசியவிட்டால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். மாறாக அதீத ஒலி எழுப்பும் இரச்சல் நிறைந்த இசை பெண்களுக்குப் பிடிக்காது.  இது, உங்கள் மனைவிக்கு உறவுக்கான உணர்வை ஏற்படுத்தும் அவ்வளவுதான். அதன் பின் எல்லாம் உங்கள் கையில்..

மற்ற சமயங்களில் உங்களால் முடியவில்லை என்றாலும் கூட, குறைந்த பட்சம் படுக்கையறையிலாவது, உங்கள் துணையை கொஞ்ச பழகிக் கொள்ளுங்கள். அதேபோல், அப்போதாவது அவர்களை செல்ல பெயர் வைத்து அழையுங்கள்.  உங்கள் பெண் துணை உறவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய பின் படுக்கையறையில் உடனே விளையாட்டுக்களை துவக்கி விடாதீர்கள்.  அநேக பெண்கள் ஆண்களின் இந்த செல்ல பெயரை படுக்கை அறையில் நிச்சயம் எதிர்பார்க்கிறார்கள். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சி துணையின் உடல் வாகுக்கு ஏற்ப நல்ல அம்சமான செல்லப் பெயரை சூட்டுங்கள். பின்னர் அவர்களது உடலை வருடவேண்டும், கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அதேபோல், முத்தம் என்பது உறவு என்னும் பூட்டை திறக்கும் சாவி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நெற்றியில் ஆரம்பிக்கும் முத்த மழையானது கண்கள், கன்னம், முகவாய், உதடு என அனைத்து பகுதிகளையும் நனைக்க வேண்டும்.  உறவு முடிந்த பின்னும், முத்தம் கொடுக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்க்கிறார்கள். ஆண்களின் ஆசை சில நிமிட நேரங்களில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்களுக்கு நிச்சயம் அப்படி இல்லை. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சில நிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பெண்களின் இச்சை அடங்கும் வரை அவர்களுக்கு தேவையான காம விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடினால் நல்லது.

பொதுவாக படுக்கையறையில் மென்மையான அணுகுமுறையையே பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். அதனால்தான் ‘மலரினும் மெல்லியது காமம்’ என்று கூறினார்கள். எனவே, படுக்கையறையில் வன்முறையை கையாளக்கூடாது. இந்த முறை சில பெண்களுக்குப் பிடிப்பதில்லை. மென்மையான பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து இதமான அணுகுமுறைகளை விரும்புவார்கள்.

பெண்கள் விரும்பும் வகையில் இதமாக நடந்து கொண்டால் இன்பத்தை வாரி வழங்குவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். இதமாய், பதமாய் கையாளும் கணவர்களுக்குத்தான் கலவியின் போது அத்தனை சுகமும் தடங்களின்றி கிடைக்கும் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

ஒரு பெண், தன்னுடைய ஆணிடம் எதிர்பார்ப்பது மூன்று விஷயங்கள்தான். அவளை புரிந்து கொள்ள வேண்டும். மதிக்க வேண்டும். நேசிக்க வேண்டும். அவ்வளவுதான். பெண்களிடமிருந்து ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக, இந்த மூன்றில் ஏதோ ஒன்றை ஆண்கள் கோட்டை விட்டிருப்பார்கள்.

முதலில், தாம்பத்ய உறவு என்பது உடல் ரீதியான விசயம் மட்டுமல்ல. அது மனரீதியான உணர்வு என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை பெரும்பாலான ஆண்கள் உணரத் தவறிவிடுவதானால்தான் சிக்கலே உருவாகிறது. எனவே பெண்ணின் மனதை ஜெயிக்கும் ஆணுக்கு மட்டும் உடல் ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

உறவின் போது கிள்ளுதல், கடித்தல் என வன்முறையை கையாளுவது சில ஆண்களுக்குப் பிடிக்கும். ஆனால் வலி நிறைந்த இத்தகைய உறவுகளை எல்லா பெண்களும் விரும்புவதில்லை. அந்த நேரத்தில் மென்மையாக தங்களை கையாளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே பெண்ணின் மனதறிந்து உறவில் ஈடுபடும் ஆண்களே வெற்றி பெறுகின்றனர்.

முக்கியமாக, உறவின் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஈடுபடுபவதை பெண்கள் விரும்புவதில்லையாம். மென்மையான அணுகுமுறையை விரும்பும் அதே நேரத்தில் சீரான வேகத்தில் ஈடுபடவேண்டும் என்று விரும்புகின்றனராம். எனவே உறவின் போது அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

படுக்கை அறையில் பொறுமை மிகவும் அவசியம். ஏனெனில் பெண்ணிற்கு மூடு வர சற்று நேரம் பிடிக்கும். அப்பொழுது முன் விளையாட்டுக்களின் மூலம் பெண்ணை தூண்டி விடலாம். அந்த நேரத்தில் முத்தமிடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆண்கள் பொறுமையாய் இவற்றை செய்தால் அப்புறம் வேண்டியதை பெண்ணிடம் கேட்டுப் பெறலாம்.

உறவின் போது கிளர்ச்சியான பேச்சுக்களை பெண்கள் விரும்புகின்றனராம். எனவே அந்த நேரத்தில் அரசியலோ, ஆன்மீகமோ அல்லது வாழ்க்கை தத்துவங்களை பேசி அவர்களை போரடிக்காதீர்கள். நாம் பேசுவதைப் பொறுத்து உணர்வின் வேகம் கூடும். படுக்கையறையில் செக்ஸி-யாக பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

இது போன்ற வழிமுறைகளை ஆண்கள் கையாண்டால், படுக்கையறையில் அவர்களும் திருப்தி அடைந்து, பெண்களையும் திருப்திபடுத்த முடியும். இல்லற வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.