1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. பாலியல்
Written By Caston
Last Updated : சனி, 19 நவம்பர் 2016 (18:04 IST)

ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கான ஆறு முக்கிய காரணங்கள்!

ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கான ஆறு முக்கிய காரணங்கள்!

தற்போது அதிக அளவில் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை தம்பதிகள் எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் ஆண், பெண் இருவராக இருந்தாலும் ஆண்களின் விந்தணுக்கள் குறைவும் ஒரு முக்கிய காரணமாகும்.


 
 
ஆண்களுக்கு இயற்கையாக விந்தணு குறைபாடு ஏற்படுவதை விட தங்கள் பழக்கவழக்கங்களால் அதிகமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதில் ஆறு முக்கிய காரணங்கள் உள்ளன அவை பின்வருமாறு.
 
* பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் போது ஒரு கரிம செயற்கை கலவை சேர்க்கப்படுகிறது. இந்த கலவை ஆண்களின் விந்தணுக்களை குறைக்கிறது. எனவே பிளாஸ்டிக்கை எரிப்பதை தவிர்க்க வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
 
* செல்போன்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் தங்கள் பின்புறம் செல்போனை வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள், கதிரியக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கின்றது.
 
* வெப்பம் அதிகமான இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும். 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருக்கும் போது சரியான அளவில் விந்தணு உற்பத்தியாகும்.
 
* அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படும். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
* புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கும்போது அது இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்கள் எண்ணிக்கையையும் குறைக்கும்.
 
* அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படும்.
 
* அதிக அளவில் மன அழுத்தத்தில் உள்ள ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கும். எனவே மன அழுத்தம் பிரச்சனையிருந்தால் அதனை சரிசெய்து வாழ வேண்டும்.