1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (16:03 IST)

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவிற்கு குவியும் பரிசுகள்

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சாக்ஷி வெண்கலப் பதக்கமும், சிந்து வெள்ளி பதக்கமும் வென்று சரித்திரம் படைத்துள்ளனர்.


 
 
மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா முதல் முறையாக வெள்ளி வென்றுள்ளது. ஒலிம்பிக் பாட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பி.வி.சிந்து.
 
ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. இதை தவிர்த்து ஹைதராபாத் பாட்மிண்டன் சங்கம்  பி.எம்.டபிள்யூ சொகுசு கார் மற்றும் ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்றதன் மூலம் பி.வி.சிந்து புதிய வரலாறு படைத்துள்ளார் என மோடி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.