ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள் (09/08/2016)
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 206 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் வந்துள்ளனர்.
15 விளையாட்டுகளில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த 118 வீரர், வீராங்கனைகள் களமிரங்க உள்ளனர். கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக வீரர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் 5 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு.
ஹாக்கி : அதிகாலை 2:30 மணிக்கு தொடங்கும் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியை எதிர்கொள்கிறது.
படகு போட்டி: மாலை 5 மணிக்கு தொடங்கும் தனிநபர் ஆண்கள் படகு காலிறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த தானு பானன் போக்கனல் பங்கேற்கிறார்.
தூப்பாக்கி சுடுதல் : மாலை 5:30 மணிக்கு தொடங்கும் பெண்களிக்கான 25 மீட்டர் பிஸ்டல் தூப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சிந்து பங்கேற்கிறார்.
வில்வித்தை : மாலை 5:30 மணிக்கு தொடங்கும் தனிநபர் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவை சார்ந்த அட்டானு தாஸ் 64 வது ரவுண்டில் பங்குபெறுகிறார்.
ஹாக்கி : இரவு 7:30 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.