பதக்க பட்டியலில் இந்தியா இடம்பெறாதா?: நமது ஏக்கத்துக்கு அன்றே விளக்கம் கூறிய கேப்டன்


Abimukatheesh| Last Updated: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (12:57 IST)
ரமணா திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் விளையாட்டுத்துறை குறித்து பேசிய வீடியோவை தற்போது வெளியிட்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நிலையை கேலி செய்து வருகின்றனர்.

 

 
ரீயோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தற்போது வரை நடைப்பெற்ற போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்திந்துள்ளது. இதுகுறித்து இணையதளத்தில் அனைவரும் இந்தியாவை கேலி செய்து வருகின்றனர். ரமணா திரைப்படத்தில் கேப்டன் விளையாட்டுத்துறை குறித்து பேசிய வீடியோவை தற்போது வெளியிட்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நிலையை கேலி செய்துள்ளனர்.
 
ரமணா திரைப்படத்தின் முடிவில் விஜயகாந்த் ஒலிம்பிக் போட்டி குறித்து அருமையான வசனம் ஒன்று பேசியிருப்பார். 
 
அதில் அவர் பேசிய வசனம்:-
 
அனைத்து நாடுகளும் போட்டியில் தங்கம் வாங்கி குவித்து கொண்டிருக்கும்போது, இந்தியா பதக்க பட்டியலில் இடம்பெறாதா என்ற ஏக்கத்துடன் எல்லோரும் காத்து கொண்டிருப்போம். இந்த நிலைக்கு காரணம் லஞ்சம். நாட்டில் எத்தனையோ திறமைசாலிகள் இருந்தும் விளையாட்டு போட்டியில் இந்தியா பின்தங்கிய நிலையிலே உள்ளது. இதற்கு காரணம் லஞ்சம்தான் என்று கூறியிருப்பார்.
 
ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வாணையக் குழு மற்றும் பயிற்சியாளர்கள் தகுதி வாய்ந்த திறமைசாலி வீரர், வீராங்கனைகளை கண்டெடுக்காமல் இருப்பதுதான், இந்தியா பதக்கம் வெல்லாமல் இருப்பதற்கு காரணம்.

 


இதில் மேலும் படிக்கவும் :