வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sasikala
Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (15:49 IST)

2016 தமிழ் சினிமா - ஒரே வருடத்தில் சிக்ஸர் அடித்த விஜய் சேதுபதி!!

1. சேதுபதி
 
பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான விஜய் சேதுபதி முதல்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படம். நேர்மையான போலீஸ்  அதிகாரி போலீஸையே கொலை செய்த, ஊர் பெரிய மனிதராலும், அவரது கைகூலிகளானஊழல் போலீஸாலும் சந்திக்கும்  சவால்களை, பிரச்சினைகளை எப்படி ஊதி தள்ளுகிறார்? எனும் கருவை கலர்புல்லாக கொண்டு வெளிவந்திருக்கும் போலீஸ்  படம் தான் 'சேதுபதி!' விஜய் சேதுபதி மிடுக்கான, அதே நேரம், நேர்மையும், துணிச்சலும் நிரம்பிய போலீஸ் அதிகாரியாக  பட்டையை கிளப்பி இருந்தார்.


 
 
எந்த நடிகரும் ஆக்ஷன் ஹீரோவாகவே விரும்புகிறார்கள். அவர்களுக்கே பணம், புகழ், ரசிகர்கள் என அனைத்தும் அதிகம்.  இரண்டாவது படத்திலேயே இரண்டு லாரி ஆள்களை அடிப்பவர்களுக்கு மத்தியில் கடந்த படத்தில்கூட வில்லனிடம்  அடிவாங்கிக் கொண்டிருந்தவர் விஜய் சேதுபதி. கதை, கதாபாத்திரம் இரண்டும்தான் முக்கியம் என்று அவர் நடக்கும்  வித்தியாசமான பாதை, தமிழ் சினிமாவை ஆரோக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. அப்படிப்பட்டவர் நடித்திருக்கும் முதல்  ஆக்ஷன் படம் இது.
 
2. காதலும் கடந்து போகும்
 
மார்ச் 10 ஆம் தேதி வெளியான காதலும் கடந்து போகும் நலன் குமரசாமி கொடுத்திருக்கும் இரண்டாவது ட்ரீட். இப்படத்தில்  விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை  மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு.

 
விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் கதைக்கு பொருத்தமான தேர்வு. பெரிதாக அலட்டிக்காமல் கதைக்கு ஏற்ப  இருவரும் சகஜமாக நடித்திருப்பது படத்தின் பலம். சூது கவ்வும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணனை இந்த  படத்திற்கும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. காட்சிகளை எதார்த்தமாகவும், இயல்பாகவும் எடுத்திருப்பது  படத்திற்கு வலு சேர்த்தது அருமை. சந்தோஷ் நாரயணன் இசையில் கககபோ பாடல் அருமை. பின்னணி இசையும் படத்தின்  கதைக்கேற்ப பயணிக்கிறது.
 
3. இறைவி
 
ஜிகிர்தண்டா படங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் படம். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியானது.  இறைவி படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்பட ஏராளமானோர்  நடித்திருந்தனர். இப்படத்தை பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில் “நம்முடைய வாழ்க்கையை சுற்றியுள்ள முக்கிய  பெண்களான தாய், சகோதரி, காதலி, தோழி ஆகியோரின் உறவுகளைப் பற்றி பெருமை பேசும் படமாக இறைவி அமையும்”  என்று கூறினார்.


 
 
பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை படம்பிடித்து  காட்டுகிறது. பெண்களின் வலி, இன்பம், துன்பம் போன்றவற்றை அருமையாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆணாதிக்க  சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டையடி தான் இந்த இறைவி. இறைவி இருவிதமான விமர்சனங்களை  பெற்றிருந்தாலும் வெளியான அந்த வாரம் இப்படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 78.50 லட்சங்களை  வசூலித்துள்ளது.
 
4. தர்மதுரை
 
ஆகஸ்டு 19 ஆம் தேதி வெளியான தர்மதுரை இந்த வருடத்தின் விஜய் சேதிபதியின் 4 வது படம். ரஜினியின் சூப்பர் ஹிட்  டைட்டிலை கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சீனு ராமசாமி கொண்டு வந்த நேட்டிவிட்டியும், விஜய் சேதுபதியின்  பெர்ஃபார்மன்ஸும் படத்தை காப்பாற்றின. சுமாராக போகும் என எதிர்பார்க்கப்பட்ட தர்மதுரை ஃபீல் குட் மூவி என்ற பெயரால்  நன்றாகவே போனது. தர்மதுரை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, கதாநாயகன் விஜய் சேதுபதி, நடிகை தமன்னா, ஐஸ்வர்யா  ராஜேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.


 
 
முதலிடத்தில் சீனு ராமசாமியின் தர்மதுரை. நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் முதல் மூன்று தினங்களில்  சென்னையில் 1.09 கோடியை வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பெற்றது. ஆசியா விஷன்  திரைப்பட விருதுகள் (2016) ஆம் ஆண்டு விருதுகளை குவித்த படம் 'தர்மதுரை'. ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016)  பட்டியலில் தமிழ் திரைப்பட பிரிவு சார்பாக விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' திரைப்படம் பல்வேறு விருதுகளை  வென்றுள்ளது.
 
5. ஆண்டவன் கட்டளை
 
விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியானது. இயக்குனர், மணிகண்டனின் இயக்கத்தில்  ஷண்முக சுந்தரம் அவர்களின் ஓளிப்பதிவில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ரித்திகா சிங், நாசர், பூஜா தேவாரியா, யோகி பாபு, வெங்கடேஷ், சிங்கம் புலி, முத்துராமன், ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ஆண்டவன் கட்டளை.

 
விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்த தயாரிப்பாளர் அன்புசெழியன் விஜய் சேதுபதிக்கு உடனடியாக தங்க செயின்  ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதோடு, இப்படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக  அளித்துள்ளார்.
 
6. றெக்க
 
2016-ல் வெளியாகிய சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெளிவந்து  வெற்றி பெற்றது. அதில் அக்டோபர் 7 ஆம் தேதி வந்த றெக்க, படமும் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த  வருடத்தில் றெக்க அவரது ஆறாவது படம்.


 
 
இந்நிலையில் விஜய் சேதுபதியின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி நடித்த படங்கள்  அனைத்தும் தொடர்ந்து வெற்றியை தருவதாக உள்ளது. இது அவரின் எதார்தமான நடிப்பை ரசிக்கும் ரசிகர்களின் ஆதரவின்  மூலமாக என்பதை மறுக்க முடியாது. அதன்படி, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஒரே நடிகரின் மூன்று படங்கள்  திரையிடப்பட்டது. இதுவரை அந்த பிரபல திரையரங்கில் இதுபோல் எந்த நடிகரின் படமும் திரையிடப்பட்டதில்லையாம்,  இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடதக்கது. றெக்க இந்த வருடத்தின் விஜய் சேதுபதியின் ஆறாவது ஹிட்டாக  அமைந்தது.