ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து நபிகளார் கூறுவது...!
ரமலான் நோன்பு இருக்கும் மாதத்தில் தாமாக முன்வந்து உளபூர்வமாக ஒரு நற்செயல் புரிகிறாரோ, அது மற்ற மாதங்களில் அவர் ஆற்றவேண்டிய கட்டாய கடமைக்கான நற்கூலியைப் பெற்றுத் தரும்.
ஒருவன் தன் குடும்ப உறவுகள், கொடுக்கல் வாங்கல், வணிகத் தொடர்புகள், அண்டை அயலார் உறவுத் தொடர்புகளில் செய்யும் தவறுகள் ஆகியவற்றுக்குத் தொழுகையும் தர்மமும் பரிகாரம் என்கிறார் நபிகளார்.
எவர் ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் கூலியைப் பெறுகிற எண்ணத்துடனும் நோற்பாராயின், அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்துவிடுகிறான்.
எவர் ஒருவர் ரமலான் மாத இரவுகளில் இறை நம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளும் ஆவலுடனும் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்து விடுகிறான் என்று சொல்லும் நபிகளார், இப்படி எச்சரிக்கையும் செய்கிறார். எவர் நோன்பு நோற்ற நிலையில், பொய் சொல்வதையும் பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் குறித்து இறைவனுக்கு எவ்வித அக்கரையுமில்லை என்று கூறுகிறார்.