வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:16 IST)

விஜய ஏகாதசி நாளில் விஷ்ணுவை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Lord Vishnu
விஜய ஏகாதசி நாளில் விஷ்ணுவை முறையாக வழிபட்டு விரதம் இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும்.


பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம்.

வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.

விஜய ஏகாதசி நாளில் விஷ்ணுவுக்கு பஞ்சாமிர்தத்தை அர்ப்பணித்து வணங்குதல் சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்சாமிர்தம் இல்லாமல் விஷ்ணு வழிபாடு முழுமையடையாது என்பது ஆன்மீக நம்பிக்கை.

விஜய ஏகாதசி விரத நாளில் குளித்த பின் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் விஷ்ணுவுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். வழிபாட்டின் போது, ​​விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.