1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:08 IST)

ஆடிப்பூரத்தினை முன்னிட்டு 1008 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

கரூரில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு அம்மன் கோயிலில் 1008 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி – வேம்புமாரியம்மனுக்கு விஷேச வேள்வி யாகங்களுடன், மஹா தீபாராதனை நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு




கரூர் நகரின் மையப்பகுதியில் பசுபதிபுரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்புமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு மூலவர் வேம்புமாரியம்மனுக்கு விஷேச பல வண்ணமலர்களினால் அலங்காரங்கள் செய்யப்பட்டதோடு, கோயிலின் முகத்துவாரத்தில் விஷேச வேள்வியாகங்கள் நடைபெற்றது. மேலும், கோயிலின் முன்னர், 1008 கர்ப்பிணிப்பெண்களுக்கு அம்மன் முன் வைக்கப்பட்டிருந்த வளையல்கள் கொண்டு சிறப்பு வளைகாப்பு நிகழ்ச்சி கோயிலின் சார்பில் நடத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காலை முதல் இரவு வரை அம்மன் மூலவருக்கு விஷேச தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மன் அருள், அதுவும் ஆடிப்பூரத்தில் பெற்று மகிழ்ந்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்