1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sasikala
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (12:20 IST)

நமது தமிழர் பாரம்பரியத்தை வளர்க்கும் தென்னிந்திய சிவசங்கமம் சித்தர்கள் மாநாடு !!

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் இவரை பரமசிவன் என அழைக்கின்றனர்.


பல சைவ சமயத்தை சார்ந்த சித்தர்கள் குழுக்கள் ஒன்றிணையும் தென்னிந்திய சிவசங்கமம் சித்தர்கள் மாநாடு (லிங்க நாடு) வருகின்ற (13/03/2022) ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.

நமது தமிழ் பாரம்பரியத்தையும்,  பண்பாட்டையும், பாரம்பரிய கலைகளையும், சித்தமருத்துவத்தையும் பற்றி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

(13/03/2022) ஞாயிற்றுகிழமை அன்று சித்தர்கள் மாநாடு பதிணென் சித்தர்களின் நல்லாசியுடன் நடைபெறுகிறது. இந்த “லிங்க நாடு” கல்பாக்கம் புதுபட்டினம்பஜார் கிழக்கு கடற்கரைசாலையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பன்னிரு திருமறைகள், சித்தர்களைப்பற்றிய சொற்பொழிவுகள், இசைக்கருவிகள், மற்றும் மூலிகை கண்காட்சி மட்டுமல்லாமல் 1000 சித்த அமைப்புக்கள் பங்கேற்று சிறப்பிக்கப்போகும் இந்த அறிய நிகழ்ச்சியில் பங்கேற்று சப்த ரிஷிகளின் நல்லாசியுடன் ஈசனுடன் ஒன்றிணைந்திட வாரீர்!!!

ஸ்ரீ அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப் பெருநிலை ஞானாலயம் சார்பாக ஸ்ரீ ரேணுகா தேவி மந்திர தீட்சை-ஐயும் அளிக்கப்படுகிறது. அதாவது உடலுக்கு பசியை போக்க அன்னதானமும், ஆன்மாவின் பசியை போக்க ஞான தானமும் வழங்கப்படுகிறது.

தீட்சை ஏற்பதன் பலன்கள்: நவகிரக ஆற்றல்களை ஈர்த்தளிகும். மாய, கர்ம, ஆணவ திரை நீங்கும். ஆன்ம  ஆற்றல் பெருகும்.
உடல் ஆரோக்கியம் பெருகும். மனதில் தெளிவு பிறக்கும். இல்லறத்தில் அமைதி அதிகரிக்கும்.

இந்நிகழ்வை ஆதீனங்கள், மடாதிபதிகள், சிவனடியார்கள், சித்தனடியார்கள், சாதுக்கள் மற்றும் நம் போன்ற சிவ தன்னார்வல தொண்டர்கள் முன்னின்று நடத்துகின்றனர்.

முன்பதிவு அவசியம். தொடர்புகொள்ள வேண்டிய எண்: திரு.உமாசங்கர் - கைபேசி 9600162099, திரு. விஷ்ணு - கைபேசி 7358526501