Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது? எதனால் அவ்வாறு தோன்றுகிறது...!

Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (15:38 IST)

Widgets Magazine

சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது.  பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை  மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.

 
நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை 7/8/2017 இன்று சந்திர கிரகணம் இரவு 10:51 மணிக்கு  ஆரம்பித்து, இரவு 12:49 மணிக்கு விடுகிறது.
 
பெளர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
 
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம்  என்றும் அழைக்கப்படுகிறது.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
 
* கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.
 
* ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
 
* செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை (அருகம்புல்) புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
 
* கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம்  மெற்கொள்ள வேண்டும்.
 
* கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள  வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியின் அருளை பெற அனுஷ்டிக்கப்படும் வரலட்சுமி விரதம்!!

இன்று வரலட்சுமி விரதமாகும். ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை ...

news

எந்த விரலால் விபூதியை தொடுவது நன்மை தரும்!

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் ...

news

முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாக பிறந்த சூர்ப்பனகை!

ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ...

news

தெய்வீக மணம் கமழும் அம்மனுக்கு பிடித்த ஆடி மாதம்!

தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே ...

Widgets Magazine Widgets Magazine