வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:36 IST)

கொரோனா குறைந்த 23 மாவட்டங்கள்; தளர்வுகள் தாராளம்! – என்னென்ன தளர்வுகள்!?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூன் 28 வரை அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டாம் வகையாக பிரிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களுக்கான தளர்வுகள்.

இரண்டாம் வகையில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர்.

மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி

அரசின் அத்தியாவசியத் துறை அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. மற்ற அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்பட அனுமதி

தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.

மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

வகை இரண்டில் உள்ள மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதி இல்லை.

மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி.