செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (15:56 IST)

ரூ.30 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

it employee
சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் தன் சம்பளம் உள்ளிட்ட பணத்தை குறிப்பிட்ட நிறுவன ஷேர் மார்கெட்டில் போட்டு வந்துள்ளார்.

இந்த ஷேர் மார்க்கெட்டில் தனக்கு அதிக லாபம் தரும் என்ற நோக்கில் அவர் அதில் அதிக முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில்,இன்று தனது அலுலகக் கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து குதித்து   அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அதாவது, ஷேர் மார்க்கெட்டில் அவர் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த வேதனையில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.