படத்தை பாத்துட்டு துணிவுடன் கொள்ளையடிக்க வந்தேன்! – வங்கி கொள்ளையன் வாக்குமூலம்!
திண்டுக்கலில் படம் ஒன்றை பார்த்துவிட்டு பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கலில் உள்ள தாடிக்கோம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இங்கு பகல்வேளையில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த வங்கி ஊழியர்களை மிரட்டி கட்டுப்போட்டு, மிளகாய் ஸ்ப்ரே உள்ளிட்டவற்றை அடித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வங்கியை சுற்றி வளைத்து கொள்ளையனை பிடித்தனர். பட்டப்பகலில் வங்கியில் தனிநபராக ஒருவன் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் திண்டுக்கல்லை சேர்ந்த கலீல் ரகுமான் என்றும், சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கொள்ளை சம்பவம் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K