காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியைக்கு கத்திக் குத்து - வாலிபர் கைது


Murugan| Last Modified ஞாயிறு, 1 ஜனவரி 2017 (16:07 IST)
காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய விவகாரம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
கன்யாகுமரி மாவட்டத்தில் சின்னத்துறை எனும் கிராமத்தில் வசிப்பவர் அனுகென்சி. இவர் திருநெல்வேலியில் உள்ல ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
 
இவர் நித்திரவிளை பூந்தோப்பு காலணியி வசிக்கும் வாலிபர் பிஜீ காஸ்ரோ ஒரு தலையாக காதலித்துள்ளார். அவர் அனுகென்சியை பலமுறை வற்புறுத்தியும் அவரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனத்தெரிகிறது. அவரது தொல்லை அதிகரிக்கவே, 6 மாதங்களுக்கு முன்பு அனுகென்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
 
ஆனாலும், பிஜீ அவரை விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். சமீபத்தில் அனுகென்சிக்கு அவரது பெற்றோர்கள் திருணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். வருகிற 5ம் தேதி திருமனம் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில்,  புது வருடத்தையொட்டி நேற்று இரவு நள்ளிரவு பிரார்த்தனைக்காக அன்கென்சி தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்து வெளியே வரும் போது, காத்திருந்த பிஜீ மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அனுகென்சி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
 
அங்கிருந்த பொதுமக்கள் பிஜீவை விரட்டிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுகென்சிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :