நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை: மர்ம நபர்கள் கொடூர செயல்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வேலைக்கு செல்ல ரயில் நிலையத்தில் கத்திருந்த இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சுவாதி(25) இன்று காலை 7:30 மணியளவில் செங்கல்பட்டு செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுவாதியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல் துறையினர் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் சுவாதியின் பேக் மற்றும் கைப்பேசியை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர். சுவாதி கடைசியாக தனது கைப்பேசியில் பேசிய அவருடைய ஆண் நண்பர் காவல் துறையால் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாக பெண் பயணிகள் குற்றம் சட்டியுள்ளனர். முக்கியமாக இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.