புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (21:50 IST)

அடுத்த ’விராட் கோலி’ நீதான் .. ’டயாப்பர் போட்டு’ கிக்ஸர் விளாசும் சிறுவன் !

நம் இந்திய  நாட்டில்  கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டான மவுசைப் பற்றி சொல்லத் தேவையில்லை. விளையாடும் வீரர்களை மட்டுமின்றி  மட்டுமன்று, சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஒட்டுமொத்த மக்களையே  ஈர்த்துள்ளது கிரிக்கெட் விளையாட்டு.
இந்நிலையில் தற்போது,ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், ஒரு பொடியன் டயாப்பர் அணிந்து கொண்டு அற்புதமாக கிரிகெட் விளையாடுகிறான். போடுகிற பால்களை அடித்து சிக்சருக்கு அனுப்பி மைதானத்தில் உண்மையான வீரர்களை நிற்பது மாதிரி போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளான்.
 
இதைப்பார்த்த பலரும் , அடுத்த விராட் கோலி நீதான் எழுதி வைச்சுக்கோ என சொல்லி சிறுவனைப் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.