வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (12:53 IST)

நேற்று செல்வாம்பாள், இன்று நந்தினி, நாளை யார்?

தங்க சங்கிலி பறிப்பு, பணம் பறிப்பு போன்ற குற்றங்களின் போது விபத்து ஏற்பட்டு பெண்கள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.


 


நேற்று செல்வாம்பாள்


 

 
வேலூர் கஸ்பாவை சேர்ந்த செல்வாம்பாள், ஆற்காடு டவுன் சப்–இன்ஸ்பெக்டராக  பணியில் இருந்தவர், 2016, ஏப்ரல் 10- ம் தேதி, வேலூரில் இருந்து அணைக் கட்டிற்கு செல்வாம்பாள் பைக்கில் சென்றபோது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த போது கழுத்து அறுபட்டு இறந்து போனார். 

இன்று நந்தினி


 

 
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஆசிரியை நந்தினி, ஏடிஎம்யில் இருந்து எடுத்த பணத்தை, திருடிச் சென்ற திருடனை பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 
 
நாளை யார்?
 
சமூக விரோதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது, பெண்களின் தாலிச் சங்கிலிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை, அவர்களது உயிர்களுக்கும் உத்திரவாதம் இல்லை. ஆனாலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது,  நம்புவோம்!