1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (04:39 IST)

கமலுக்கு ஆதரவாக எழுதிய எழுத்தாளரின் இணையதளம் முடக்கம்

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் புரட்சிகரமான, விழிப்புணர்வுகள் தரும் கருத்துக்களை மக்களிடம் தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்தில் உள்ள உண்மை கசப்பதால் ஒருசில அரசியல்வாதிகள் கமலுக்கு எதிர்ப்பாக உள்ளனர்.




 

மேலும் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த கமல், தற்போதைய அரசியல் சூழ்நிலை, மகாபாரதம் மற்றும் அவர் கூறிய ஒருசில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கமலின் நெருங்கிய நண்பரும் பிரபல எழுத்தாளருமான ஜெயமோகனின் இணையதளத்தில் கமலுக்கு ஆதரவாக ஒருசில கட்டுரைகளை அவர் பதிவு செய்தார்

ஆனால் திடீரென அவரது இணையதளத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து அவர் எழுதிய ஒருசில பதிவுகளை அழித்துவிட்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் 'இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா? 'உள்ளிட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டதாகவும், மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் செய்ய ஜெயமோகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.