1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (10:36 IST)

ஹோட்டல் கூரையை பிரித்து கொள்ளையடித்த பெண்கள்! – அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!

CCTV
திருவண்ணாமலையில் பூட்டியிருந்த உணவகத்தின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து பெண்கள் இருவர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேலூர் நெடுஞ்சாலையில் சாந்தம் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று வழக்கமான பணிகள் முடிந்து 10.30 மணியளவில் உணவகம் பூட்டப்பட்டுள்ளது. பின்னர் இன்று அதிகாலை உணவகத்தை திறந்தபோது உள்ளே இருந்த கல்லாப்பெட்டியில் பணம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் நள்ளிரவு 1 மணியளவில் உணவகத்தின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த இரண்டு பெண்கள் கல்லாப்பெட்டியில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். அதேசமயம் பெண்கள் இருவர் கூரையை பிரித்து கொள்ளையடித்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K