திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (22:40 IST)

ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் கபாடி போட்டி

கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி இன்று தொடங்கியது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கரூர் அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி தொடங்கியது.போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் வெற்றி முதல் அணிக்கு முதல் பரிசாக ரூ 73 ஆயிரம்,இரண்டாம் பரிசாக ரூ 50 ஆயிரம், மற்றும் மூன்றாவது பரிசாக ரூ 25 ஆயிரம் என மூன்று பரிசுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கிறார்.இன்றைய போட்டியினை அதிமுக வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தொடஙகி வைத்தார்.