1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 செப்டம்பர் 2018 (16:33 IST)

இப்படி ஒரு தாயா? - இந்த பிஞ்சு குழந்தைகளை கொல்ல மனம் வருமா?

கள்ளக்காதலுடன் ஓடுவதற்காக கணவர் மற்றும் குழந்தைகள் அனைவரையும் அபிராமி கொல்ல தொட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

 
குன்றத்தூர் பகுதியில் வசித்து வருபவர் விஜய்(30). இவர் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி அபிராமி(25). இவர்களுக்கு 7வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அபிராமிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பாக விஜய்க்கும், அவருக்கும் சண்டை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. 
 
இந்நிலையில், மாதக்கடைசி காரணமாக நேற்று இரவு வங்கியிலேயே தங்கிய விஜய் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரின் இரு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டில் இறந்து கிடந்தது கண்டு அவர் அலறி துடித்துள்ளார். மேலும், அபிராமியையும் வீட்டில் காணவில்லை. 
 
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அதில் சில உண்மைகள் வெளியே தெரிய வந்துள்ளது.
 
அதாவது, தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி செல்வதே அபிராமியின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், நேற்று இரவு விஜய் வீட்டிற்கு வரவில்லை. 

 
விஜய் இரவு வீட்டிற்கு வந்ததும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, டீ-யில் விஷத்தை கலந்துவிட்டு அவருக்காக அபிராமி காத்திருந்துள்ளார். ஆனால், அவர் வரவில்லை. எனவே, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளக்காதலனின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீயை அபிராமி கொடுத்துள்ளார்.
 
டீயில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் தாய் பாசத்துடன் தருகிறாள் என நம்பி அந்த பிஞ்சுக் குழந்தைகள் குடித்துள்ளனர். சிறுதி நேரத்தில் துடிதுடித்து வாயில் நுரை தள்ளி அவர்கள் இறந்துள்ளனர். அவர்கள் இறந்து விட்டனரா என உறுதி செய்த பின்பே, அபிராமி தனது கள்ளக்காதலனுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளதாக தெரிகிறது.
 
போலீசாரின் விசாரணையில் அவர்கள் தற்போது நாகர்கோவிலில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவர்களை கைது செய்ய போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
 
அபிராமி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு, இந்த அழகான பிஞ்சு குழந்தைகளை கொல்ல இந்த பெண்ணிற்கு எப்படி மனசு வந்ததோ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.