திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (17:48 IST)

கள்ள உறவுக்கு நோ சொன்ன கள்ளக்காதலி: வெட்டி சாய்த்த கள்ளக்காதல்

கள்ள உறவுக்கு நோ சொன்ன காரணத்தினால், கள்ளக்காதலியை வெடிக்க கொன்ற கள்ளக்காதலன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். 
 
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொடிபவுனு. கணவனை இழந்த இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்கு கூலி வேலை செய்து வந்துள்ளார். 
 
இவருக்கு குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்கிற லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், மகள்கள் இல்லாத சமயத்தில் ராமு கொடிபவுனுவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். 
 
அப்போது இவருவம் உடலுறவு கொண்டுள்ளனர். இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரியவர அவர்கள் கொடிபவுனுவை கண்டித்துள்ளனர். இதனால் மனம் திருந்திய அவர், ராமுவிடம் இனி இது வேண்டாம் என கூறியுள்ளார். 
 
ஆனால், ஆந்திரம் அடைந்த ராமு கொடிபவுனிவை தாக்கியுள்ளார். பின்னர், அவரை சமாதனம் செய்ய கொடிபவுனுவின் வீட்டிற்கு சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு ராமு கொடொபவுனுவை சரிமாரியாக அறிவாளால் வெட்டி தப்பித்துள்ளார். 
 
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார், உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டேண்டில் சுற்றிக் கொண்டிருந்த ராமுவை  கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.