வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 மே 2021 (13:21 IST)

ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோயில் வாசலில் வைத்த பெண்…. மூட நம்பிக்கையின் உச்சம்!

தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் வரும் மே 7 ஆம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்காக ஒரு பெண் தனது நாக்கை வெட்டி உண்டியலில் போட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனிப் பெரும்பாண்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் 40 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளதை அடுத்து திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா  என்பவர் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக உள்ளதை அடுத்து பரமக்குடியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் தனது நாக்கை வெட்டி கோயில் வாசலில் வைத்துள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.