வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (19:02 IST)

ஏடிஎம் எந்திரத்தில் இருந்து வந்த செல்லாத நோட்டுகள் – வங்கியில் ஏற்பட்ட குழப்பம்!

திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது எனக் கூறியதால் வாடிக்கையாளர் வங்கியில் சென்று கேட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் ஏடி.எம் சென்று 3500 ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது எடுத்த பணத்தில் கடைக்கு சென்று கொடுத்த போது அந்த பணம் செல்லாது என சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியான் அவர் வங்கியில் சென்று மாற்ற முடிவு செய்துள்ளார். ஆனால் அவரால் வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வங்கிக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இன்று சென்று சம்மந்தப்பட்ட வங்கியில் கேட்டபோது அவர்கள் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து செல்லாத நோட்டுகள் வர வாய்ப்பில்லை என சொல்லியுள்ளனர். இதையடுத்து அவர் சொன்ன ஏடிஎம் மையத்துக்ஜும் சென்று சோதித்ததில் அவர் உருவம் தெளிவாக தெரியவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதனால் வங்கி நிர்வாகம் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துள்ளது.