Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குளிர்பான பாட்டிலில் பூச்சிமருந்து: அம்மா உணவகத்தின் சமையல் பெண் பரிதாப பலி!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2017 (16:26 IST)
குளிர்பானம் உள்ள பாட்டிலில் பூச்சிமருந்தை வைத்திருந்ததால், அதை தெரியாமல் குடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 
 
வால்பாறையில் வசித்து வருபவர் அய்யம்மாள் செல்வி. இவர் அங்குள்ள அம்மா உணவகத்தில் சமையல் வேலை செய்துவந்தார். அவரது கணவர் திருசெல்வம் கேபிள் ஆப்ரேட்டராக உள்ளார். 
 
இவர்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் படித்து வரும் இரண்டு மகன்கள் உள்ளனர். அய்யம்மாள் செல்வி குளிர்பான பாட்டில் உள்ள திரவத்தை குடித்திருக்கிறார். அதன் பின்னரே அதில் இருந்தது பூச்சி மருந்து என்பதை உணரந்துள்ளார்.
 
உடனடியாக பக்கத்தில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவிக்கவே, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்மாள் செல்வி உயிரிழந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :