1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:59 IST)

பாத்ரூமிற்குள் குளிக்க சென்ற பெண்ணின் மேல் பற்றிய தீ – உடல்கருகி பரிதாப மரணம்!

கோத்தகிரியைச் சேர்ந்த வெர்ஷியா என்ற பெண் மண்ணெண்ணெய் கொட்டி தவறுதலாக தீப்பற்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஷெர்சியா. இவர் வீட்டில் செல்பில் இருந்து மண்ணெண்ணெயை எடுக்க முயன்ற போது கைத்தவறி அவர் மேல் மண்ணெண்ணெய் கொட்டியுள்ளது. இதனால் அவர் பாத்ரூமுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஹீட்டர் சுவிட்சை போட்டபோது அதில் இருந்து தீப்பொறி அவர் மேல் பட்டு தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து அவர் உடல் முழுவதும் தீப்பரவ, அலறியுள்ளார். அவர் சத்தம் கேட்டு பெற்றோர் வந்து பார்த்து தீயை அணைப்பதற்குள் பெரும்பகுதி உடல் தீக்கிரையாகியுள்ளது. அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.