6 வயது சிறுமியை கொடூரமான தாக்கும் பெண் - வைரல் அதிர்ச்சி வீடியோ


Murugan| Last Modified செவ்வாய், 6 ஜூன் 2017 (11:50 IST)
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 
சாப்பிடும் உணவை சிந்திய 6 வயது சிறுமியை, 50 வயதிற்கும் மேற்பட்ட பெண் ஒருவர் தன் கையில் உள்ள பிரம்பால், தொடர்ச்சியாக நில நிமிடங்கள் கொடூரமாக அடித்து துவைக்கும் அந்த வீடியோவை கண்ட பலரும் மனம் பதபதைத்தனர்.
 
அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அந்த பெண் சிறுமியை அடிப்பதை, அங்கிருந்த ஒரு பெண் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதையடுத்து இந்த வீடியோ பலரும் பகிர்ந்து கொண்டதோடு, அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர்.
 
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார் அந்த சிறுமியை தாக்கிய அந்த பெண்ணை கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :