1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (16:31 IST)

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை தாஜ் ஹோட்டல் அருகே உள்ள பி கே என் பள்ளி உள்ளது இப்பள்ளியின் மாணவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து வந்த பி கே என்  பள்ளி வாகனம்  பள்ளியின் அருகே பழுதாய் நின்றது.
 
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் நின்றதால் அப்பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளுமாறு அந்த தனியார் வாகனத்தின் டிரைவர் கூறியதன் பேரில் பள்ளி மாணவர்கள் வாகனத்தை தள்ள முயற்சித்தனர்.
 
அப்பொழுது அந்த வழியாக வந்த பி ஆர் சி பயிற்சி வாகனத்தின் டிரைவர் பள்ளி வாகனம் நிற்பதை கவனித்து தனது பஸ்ஸில் உள்ள  பயிற்சி  மாணவர்களை இறங்கி பள்ளி வாகனத்தை தள்ளுமாறு கேட்டுக் கொண்டதால் அதிலிருந்து மாணவர்கள் இறங்கி பள்ளி வாகனத்தை தள்ளி விட்டனர்.
 
தனியார்  பள்ளி நிர்வாகம் பள்ளி வாகனத்தை பராமரிப்பு செய்து இதுபோன்று மீண்டும் மாணவர்கள் பள்ளி வாகனத்தை தள்ளும் நிலைக்கு வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.