திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (09:37 IST)

சொன்னப்படி கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி??

ரஜினிகாந்த் சொன்னப்படி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. 

 
ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நாள் நெருங்கிவிட்டதாக எஅசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது அவர் முழு ஓய்வில் இருக்கிறார். 
 
ஒரு வாரம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படும் எந்த செயலையும் அவர் செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ரஜினியை அவ்ரது இல்லத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் சந்தித்து உள்ளனர். 
 
இந்த சந்திப்பின் போது 70% நிறைவு பெற்றுள்ள பூத் கமிட்டி பணிகள் தொடர்பாகவும் மேலும் திட்டமிட்டபடி டிசம்பர் 31 ஆம் தேதி கட்சியின் அறிவிப்பை வெளியிடுவது குறித்தும் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.