ஜனாதிபதி தேர்தல்: கருணாநிதி ஓட்டு போடுவாரா?


sivalingam| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (05:59 IST)
இந்தியா முழுவதும் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ராம்கோவிந்த் மற்றும் மீரா குமார் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


 
 
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவர் இன்று ஓட்டு போட வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
முதுமை காரணமாக முழு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதி, பிறந்த நாள் விழா, வைரவிழாவில் கூட கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே கருணாநிதி ஓட்டு போட வருவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
கருணாநிதியை தவிர மீதியுள்ள 88 திமுக எம்.எல்.ஏக்கள் இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :