அழுது கண்ணீர் வடித்த ஜெ. அண்ணன் மகன் தீபக்: தினகரன் பக்கம் செல்கிறாரா?

அழுது கண்ணீர் வடித்த ஜெ. அண்ணன் மகன் தீபக்: தினகரன் பக்கம் செல்கிறாரா?


Caston| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (10:22 IST)
டிடிவி தினகரன் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தகுதியற்றவர், அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தற்போது தினகரன் பக்கம் செல்ல உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 
 
சசிகலா உறவினர்களின் எந்த துக்க நிகழ்ச்சிகளிலும் இதுவரை பங்கேற்காத ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சமீபத்தில் இறந்த டிடிவி தினகரனின் மாமியாரின் இறுதிச்சடங்கிற்கு சென்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
 
இதுவரை நடராஜன் பக்கம் இருந்த தீபக் தற்போது தினகரன் பக்கம் நகர்வது போல உள்ளது. தினகரனின் மாமியாரும் டாக்டர் வெங்கடேஷின் தாயுமான சந்தானலட்சுமியின் இறுதி சடங்கிற்கு மாலையுடன் வந்த தீபக்கை திவாகரன் வரவேற்றார். தினகரனும் தீபக்கை பார்த்து புன்னகைத்தார். அதன் பின்னர் தீபக் வெங்கடேஷை பார்த்ததும் கட்டியணைத்து அழுது தனது வறுத்தத்தை தெரிவித்தார்.
 
தீபக்கின் வருகையை எதிர்பார்க்காத சசிகலா உறவினர்கள் அவர் அழுததை பார்த்து ஆச்சரியத்துடன் கண்ணீர் வடித்தனர். தினகரனை தொடக்கத்தில் எதிர்த்து வந்த தீபக் தற்போது அவரது மாமியார் மரணத்துக்கு வந்தது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட தான் என சசிகலா குடும்பத்தினர் பேசுகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :