புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:48 IST)

சென்னை மெட்ரோ ரயில்களில் வைபை வசதி

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் வைபை வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
சென்னை நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்போது சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் நகரின் முக்கிய இடங்களை இணைத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் விரைவில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு செயலி ஒன்றை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:-
 
தற்போது செண்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் செயலி மூலம் எச்.டி தரத்துடன் கூடிய பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று கூறினார்.