திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (13:52 IST)

கேள்வி கேட்ட கணவனை கரண்டியால் அடித்த மனைவி !

சென்னை அயனாவரம் என்ற பகுதியில் உள்ள பொன்னுவேல்புரத்தில்  கார்த்திக் என்பவர் கொத்தனாராக வேலைசெய்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார்.
தனலட்சுமி தனது சித்தியின் கடைக்கு அடிக்கடி சென்று வந்ததால் இரவில் தாமதமாக வருவதுடன் வீட்டில் சரிவர சமையல் செய்யவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து  கார்த்திக் தன் மனைவியிடம் கேட்டுள்ளார்.
 
இதனையடுத்து தனலட்சுமி கோபம் கொண்டு தனது சித்தியை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கு கார்த்திக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆவேசம்  அடைந்த தனலட்சுமி தனது கையில் வைத்திருந்த கரண்டியால் கார்த்திக்கின் தலை, நெற்றி என மாறி மாறி அடித்துள்ளார்.
 
இந்த தாக்குதலில் காயம் அடைந்த கார்த்திக் இதுகுறித்து அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதனைத்தொடர்ந்து தனலட்சுமி மற்றும் அவரது சித்தியின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.