வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 மே 2021 (18:38 IST)

அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இல்லை: ஏன் தெரியுமா?

தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியான நிலையில் அந்தப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர் ஆனால் அவரது பெயர் அமைச்சரவை பட்டியலில் இல்லை 
 
முதல்கட்ட அமைச்சரவை பட்டியலில் இல்லை என்றாலும் அமைச்சரவை நீடிக்கும் போது அவரது பெயர் இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் படுத்திக் கொண்டனர். இந்த நிலையில் உதயநிதியின் பெயர் அமைச்சரவை பட்டியல் இல்லாதது ஏன் என்பது குறித்த தகவல் திமுக வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ளது
 
10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுதான் ஆட்சியை முக ஸ்டாலின் பிடித்துள்ளார் என்றும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் வாரிசு அரசியல் என்ற கெட்ட பெயர் வர வேண்டாம் என்பதற்காக ஸ்டாலின் அவர்கள் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தரவில்லை என்றும் ஆனால் உதயநிதிக்கு ஓரளவுக்கு அனுபவம் ஏற்பட்டவுடன் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இருப்பினும் உதயநிதியின் நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது