வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (08:59 IST)

திருவாரூர் தேர்தல் ரத்து ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த தேர்தல் ஆணையம் இன்று திடீரென தேர்தல் ரத்து என அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கான காரணத்தை தேர்தல் ஆணையம் தற்போது விளக்கியுள்ளது. கஜா நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கும் வகையிலும், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது என்பதாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகவும் அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தலை ரத்து செய்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆக, தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு ஒரு முக்கிய காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தல் ரத்து செய்யப்படும் என தெரிந்தே அதிமுக, தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது தற்போது அனைவருக்கும் புரிய வருகிறது.