கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியா? ஓ இதுதான் காரணமா?
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
கமல்ஹாசன் இந்த தொகுதியை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியை திமுக காங்கிரஸுக்கும், அதிமுக பாஜகவுக்கும் கொடுத்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அங்கே பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடாத தொகுதி என்பதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 13 சதவீத வாக்குகளைக் கொடுத்த தொகுதி என்பதாலும் கமல் அந்த தொகுதியில் களமிறங்க உள்ளாராம்.