ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (10:58 IST)

சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மாநிலத்திலேயே சென்னையில்தான் குறைந்த வாக்கு பதிவாகி உள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு ஆனதற்கு ஆளும் கட்சி மேல் உள்ள வெறுப்பு என்று கூறப்படும் நிலையில் இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார் 
 
சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம் வேறு காரணம் வெறுப்பு அல்ல என்றும் நிறைய மக்கள் நேற்று சொந்த ஊருக்கு சென்றதே காரணம் என்றும் கூறியுள்ளார் 
 
சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளி இரவே பலர் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள் என்றும் அதனால்தான் சென்னையில் வாக்குகள் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் வாக்குப்பதிவு குறைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அமைச்சர் கூறுவது உண்மையா அல்லது எதிர்க்கட்சியினர் கூறும் வெறுப்புதான் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்