வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:27 IST)

சென்னை குறைவான வாக்குப்பதிவுக்கு இதுதான் காரணமா?

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் சென்னை மாவட்டத்தில் மிகவும் குறைவான அளவுக்கு வாக்குப்பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வழக்கத்தை விட இந்த முறை மிகவும் குறைவான அளவில்தான் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிலும் சென்னையில் 60 சதவீதத்துக்குள்ளாகவே வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்திலேயே சென்னைதான் மிகவும் குறைந்த வாக்குப்பதிவு நடந்த மாவட்டமாக உள்ளது.

சென்னையில் தங்கியிருப்போர் பெரும்பாலோனோர்க்கு சென்னையிலும் சொந்த ஊரிலும் வாக்கு இருப்பதால், பலரும் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் சென்னையில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.