புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (12:57 IST)

பீலா ராஜேஷ் மாற்றம்: பின்னணி என்ன??

தமிழக சுகாதாரத்துறைச் செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது ஏன் என காரணம் அரசல்புரசலாக் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏற்கனவே சுகாதார செயலாளராக இருந்தவரும் தற்போது கொரோனா சிறப்பு அதிகாரியாக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் அவர்கள் சுகாதார செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
 
கொரோனா தொற்று தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்த காலத்தில், பீலா ராஜேஷின் செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த பாராட்டைப் பெற்றன. ஆனால், அதற்குப் பிறகு அவரது செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. 
 
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்துச் செல்வதில்லை என்ற புகார் எழுந்தது. இதன் காரணமாகவே அவர் மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.