செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (10:58 IST)

ஊரடங்கு வேண்டாம், கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்: உலக சுகாதார மையம்

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் உலக சுகாதார மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிர்பார்த்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அதனால் ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனாவை விட பல மடங்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கும் என கூறப்பட்டாலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பாக இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது 
 
இதற்கு முக்கிய காரணம் உலகம் முழுவதும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்துவதே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஊரடங்கு உள்பட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் எதிர்பார்த்த பாதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளது