ஜெயலலிதாவின் தோழி சசிகலா; சசிகலாவிற்கு தோழி யார் தெரியுமா?

ஜெயலலிதாவின் தோழி சசிகலா; சசிகலாவிற்கு தோழி யார் தெரியுமா?


Caston| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (15:25 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பான பொதுச்செயலாளர் பெறுப்பை ஏற்றுள்ளார். இதனையடுத்து அவர் குறித்தான செய்திகள் தான் ஊடகங்களில் அதிகமாக வருகின்றன.

 
 
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என கூறப்படும் சசிகலா தான் அவருக்கு தோழி என கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவுக்கு ஜெயலலிதாவை தவிர்த்து இன்னொரு தோழியும் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கணவர் நடராஜனின் தங்கை மாலா தான் சசிகலாவின் தோழி என கூறப்படுகிறது.
 
சசிகலாவுக்கு நடராஜனுடன் திருமனமாகி அவர்கள் வீட்டிற்கு சென்றவுடனே அவரது தங்கை மாலாவுடன் நட்பாக இருந்துள்ளார் சசிகலா. போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ஜெயலலிதா சசிகலாவை வெளியேற்றிய போது கூட சசிகலா தி.நகரில் உள்ள மாலாவின் வீட்டிற்கு தான் அவர் சென்றுள்ளார்.
 
சசிகலா தனக்கு எப்பொழுது எல்லாம் மனக்கஷ்டம் வருமோ அப்போதெல்லாம் மாலாவுடன் தான் அதனை பகிர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சசிகலா இருந்ததுபோல, சசிகலாவுக்கு மாலா இருப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது தற்போது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :