Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கள்ள உறவு வைத்திருக்கும் சசிகலா புஷ்பாவுக்கு யார் கணவர்: ஆவடி குமார் தரம்கெட்ட பேச்சு!

கள்ள உறவு வைத்திருக்கும் சசிகலா புஷ்பாவுக்கு யார் கணவர்: ஆவடி குமார் தரம்கெட்ட பேச்சு!


Caston| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (18:11 IST)
தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞரை அதிமுகவினர் சரமாரியாக தாக்கி ரத்தம் வரும் வரை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக பொதுச்செயலாளராக நான் போட்டியிடுவேன் என சசிகலா புஷ்பா கூறினார்.
 
இதனையடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய சசிகலா சார்பில் அவரது கணவர் மற்றும் வழக்கறிஞர் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை அதிமுகவினர் சரமாரியாக தாக்கினர்.
 
அதன் பின்னர் அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சசிகலா புஷ்பா ஆதரவாளர்களிடம் இதைவிட எப்படி மென்மையாக நடந்து கொள்ள முடியும்? என நியாப்படுத்தி பேசினார்.
 
அதிமுகவில் இருந்து முழுமையாக ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. மேலும் திமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா. இதை எல்லாம் தாண்டி ஜெயலலிதாவை பற்றி ராஜ்யசபாவில் மிகவும் கீழ்த்தரமாக பேசினார்.
 
இப்படிப்பட்ட ஒரு சதிகாரியை எப்படி அணுக வேண்டும் என்று அதிமுகவினருக்கு தெரியும். அதிமுகவின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு சசிகலா புஷ்பா யார்? அவரது ஆதரவாளரையோ அல்லது உறவினரையோ எப்படி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க முடியும் என்றார் ஆவடி குமார்.
 
சசிகலா புஷ்பாவின் கணவரை அடித்ததை பற்றி செய்தியாளர் கேட்டதற்கு, சசிகலாவின் கணவர் யார்? யார் அவருக்கு கணவர்? திருச்சி சிவாவா? என கேட்டார். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இப்படி பேசுவது நல்லதல்ல எனவும் அவரது கணவர் யார் என கிண்டலடித்து கேள்வியெழுப்பியுள்ளதும் அநாகரிகமானது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :