1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (18:08 IST)

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறத் தகுதியானவர்கள் யார்? தமிழக அரசு தகவல்

MK Stalin
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின்  கலந்து கொண்டுள்ளார்.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் நிலையில்,  இந்த உரிமைத் தொகை  ரூ.1000  பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 

*ஏக்கர்   நிலம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இல்லை.
 

*குடும்பத்திற்கு ஒருவர்  மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெற முடியும். சொந்தக் கார் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.

*பெண் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது.

 *பயனாளர்களுக்கு ரேசன் கார்டு உள்ளதோ அதேகடையில்தான் பெற முடியும்.

*மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது  நிரம்பியிருக்க வேண்டும். இதில், வயது  உச்சபட்ச வயது இல்லை.

மேலும்,’ தகுதியுள்ள பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகையை செலுத்த  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.