Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகரில் ஐந்துமுனை போட்டி? வெற்றி பெறுவது யார்?


sivalingam| Last Updated: சனி, 11 மார்ச் 2017 (05:27 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் இங்கு இப்போதைக்கு ஐந்துமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


தேர்தல் தேதி அறிவித்த சில நிமிடங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சசிகலா அணியின் சார்ப்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொகுதியின் நன்கு அறிமுகமானவர் என்பதால் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என தெரிகிறது. திமுகவும் வேட்பாளரை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில் ஆர்கே நகரில் மக்கள் நல கூட்டணி போட்டியிடும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகிய திருமாவளவன் அறிவித்துள்ளார். அனேகமாக அவரே போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆர்.கே.நகரில் ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :