செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (13:34 IST)

சசிகலாவுக்காக ரூ.10 கோடி டிடி எடுத்தவர்கள் யார் யார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் ரூபாய் 10 கோடி அபராதம் கட்ட வேண்டும் என நீதிமன்றம் சசிகலாவுக்கு உத்தரவிட்டதை அடுத்து சசிகலா சார்பில் இன்று ரூபாய் 10 கோடியை கட்ட இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் 10 கோடி ரூபாய்க்கான டிடி தயாராக இருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தவுடன் அந்த டிடியை சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 3 பேர்கள் பெயரில் மட்டும் 10 கோடி டிடி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவரின் பெயரில் மூன்றே கால் கோடி டிடியும், வசந்தா தேவி என்பவரின் பெயரில் மூன்றே முக்கால் கோடி டிடியும் எடுக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஆக்சிஸ் வங்கியில் ஹேமா என்பவரின் பெயரில் மூன்று கோடி ரூபாய்க்கு டிடி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூபாய் 10,000க்கான டிடி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது