திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (21:22 IST)

நாயின் காலை முத்தமிட்ட வெள்ளை சிங்கம் ...வைரலாகும் வீடியோ

இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும் , பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சரணாயலத்தில்  வெள்ளை சிங்கம் மற்றும் சில விலங்குகள் டைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்த சிங்கம் இருக்கின்ற பகுதிக்கு ஒரு நாய் வந்தது. அப்போது, அந்த நாய் தனது கால்களை தூக்கியது. அதை தனது கால்களில் வாங்கிய சிங்கம் அதை தனது வாயால் முத்தமிட்டது. இந்த அரிதான வீடியோ வைரல் ஆகிவருகிறது.