Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீங்க எந்த பத்திரிக்கை?: விஜயகாந்த் பாணியில் செய்தியாளரை மிரட்டிய சசிகலா!

நீங்க எந்த பத்திரிக்கை?: விஜயகாந்த் பாணியில் செய்தியாளரை மிரட்டிய சசிகலா!


Caston| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:11 IST)
கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை நேற்று இரண்டாவது முறையாக சசிகலா சென்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நீங்க எந்த பத்திரிக்கை என கோபமாக கேட்டார்.

 
 
நேற்று சசிகலா கூவத்தூர் சொகுசு விடுதிக்கு சென்று எம்எல்ஏக்களிடம் பேசினார். அப்போது அங்கு பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் செல்போன், கேமரா போன்றவை குண்டர்களால் எடுத்து வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
 
பெரும் சலசலப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய சசிகலா பின்னர் அவர்கள் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் கோபம் அடைந்த சசிகலா நீங்க எந்த பத்திரிக்கை என திருப்பி கேட்டார்.
 
பின்னர் உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்குமோ என்னவோ? அதனாலத்தான் அப்படி கேட்கிறீர்களோ என்று கோபமாக கூறினார். மேலும் சசிகலா செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடமே திரும்பி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் செய்தியாளர்கள் முகம் சுளித்தனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :