Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிசினஸை விட நயன்தாரா முக்கியமா? சரவணா ஸ்டோர் ஓனரின் அதிரடி முடிவு


sivalingam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (21:52 IST)
கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், திரைப்படங்களை தயாரித்து நடிக்கவுள்ளதாகவும், முதல் படத்திலேயே நயன்தாராதான் நாயகி என்பதும்தான். இந்த செய்திக்கு ஏற்கனவே சரவணன் மறுப்பு தெரிவித்தபோதிலும் இன்னும் இந்த செய்தி டிரெண்டில்தான் உள்ளது.


 


இந்த நிலையில் சரவணன் அவர்களின் நெருங்கிய நண்பரும் அவர் விளம்பரத்தில் நடிக்கும்போது அவருக்கு ஆடையலங்காரம் செய்த பிரபல காஸ்ட்யூம் டிசைனருமான சத்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நயன்தாராவுடன் சரவணன் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தியே. நயன்தாராவுடன் நடிப்பதைவிட அவருக்கு தொழில்தான் முக்கியம். அவர் தனது தொழிலில் முழுமூச்சாக இறங்கி அதில் பிசியாக உள்ளார். திரைத்துறையில் அவர் நுழைய வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

சத்யாவின் இந்த விளக்கத்தை தொடர்ந்தாவது இந்த வதந்தி முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 


இதில் மேலும் படிக்கவும் :